திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட ஆதி.

திருவள்ளூர் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் போக் சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புல்லரம்பாக்கத்தில் பிளஸ் டூ படித்து வந்த 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், புல்லரம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 16.வயது சிறுமி திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 12- வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் புல்லரம்பாக்கம், அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன்,தனுஷ் என்கிற ஆதி (19) என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை அந்த சிறுமியும் நம்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு ) பத்மஸ்ரீபபி மற்றும் உதவி ஆய்வாளர் சுசீலா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தனுஷ் என்கிற ஆதி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆதியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ப சிறையில் அடைத்தனர். மேலும் 16.வயது சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு விரைவில் கோர்ட்டு உத்தரவின் படி மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகுிறது.

Tags

Next Story
ai in future agriculture