கலெக்டர் அலுவலகத்தில் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே குடிசை வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கார்த்திக் (28). கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் ,
சரவணன் குமரன் என்ற மகனும் சரண்யா, சத்யா என்ற மகளும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் வீட்டை சுற்றி வசித்துவரும் சிலர், குடிசை வீடு மற்றும் இடத்தை காலிசெய்ய சொல்லி கட்டாயப்படுத்தி அடிக்கடி கார்த்திக் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் கார்த்திக், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் கொடுத்த மனு மீது எவ்வித அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் வீட்டை அப்பகுதியில் உள்ள சிலர் அபகரிக்கும் நோக்கத்துடன் வீட்டை சுற்றிலும் பெரிய பள்ளங்களை தோண்டி விட்டாராம். இதனால் அவர் வீட்டுக்குள் செல்ல முடியாமல் குடும்பத்துடன் தவித்துள்ளார்.
நேற்று காலை கார்த்திக் தனது மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அலுவலர்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லாத காரணத்தினால் மனம் உடைந்த. கார்த்திக் அங்கிருந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், போலீசார் முன்னிலையில் கார்த்திக் பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்து போலீசார் உடனடியாக சென்று கார்த்திக்கை மீட்டு, ரத்தவெள்ளத்தில் நின்றிருந்த கார்த்திக்கை உடனடியாக போலீஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதற்றம் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu