திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்
X
திருவள்ளூரில் தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மாத்திரைகளை வழங்கினார்.

தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாத்திரைகள், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி , இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி, திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகளை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகளும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின்படி, ஒரு வாரத்திற்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story