தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்ட துவக்க விழா :அமைச்சர்கள் பங்கேற்று துவக்கம்

Workers Medical Scheme Inauguration
மக்களைத் தேடி மருத்துவத்தைத் தொடர்ந்து தமிழக அரசானது தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியில் உள்ள ஹூண்டாய் மோபிஸ் தனியார் தொழிற்சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர்கள் உடல்நிலை பாதுகாக்கும் வகையில் தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்டம் இன்று திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
Workers Medical Scheme Inauguration

தொழிலாளர்கள் மருத்துவ திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் காந்தி உட்பட நிர்வாகிகள்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் ,சேலம், திருச்சி ராணிப்பேட்டை ,திண்டுக்கல், மதுரை சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆகிய மருத்துவ மண்டலங்கள் உள்ளடக்கிய 711 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 90 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக தொழிலாளர்களை தேடிமருத்துவ திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய் பரிசோதனையானது தொழிலாளர்களுக்கு செய்யப்படவுள்ளது.இதில் ஒரு மாதத்தில் 8 லட்சம் தொழிலாளருக்கு இத்தகைய பரிசோதனையானது மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஓராண்டில் 31,493 தொழிற்சாலைகளில் பணியாற்றம் 31 லட்சத்து 16 ஆயிரத்து 835 தொழிலாளர்களுக்கு ஓராண்டில் படிப்படியாக திட்டங்கள் விரிவுபடுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu