ஊத்துக்கோட்டை அருகே கோசாலையில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்
கோசாலையில் இருந்து தப்பி திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த தொழிலாளர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட தேவந்தவாக்கம் கிராமத்தில் தனியாரின் கோசாலா இயங்கி வருகிறது. இங்கு ஐம்பதுக்கு மேற்பட்ட மாடுகள் வைத்த பராமரித்து வருகிறார்கள். இங்கு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஒடிசா ஆகிய பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளை அவர்கள் தனது குடும்பத்துடன் அழைத்து வந்து அந்த கோசாலையில் தங்க வைக்கப்பட்டு உரிமையாளர்கள் கொத்தடிமையாக நடத்துவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று அந்த கோ சாலையில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த இரண்டு பேரும் ஒடிசா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் ஒரு குழந்தை என தப்பித்து வெளியே வந்துள்ளனர். அப்போது ஒருவருக்கு காலில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தையல் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறு பேரும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் கூறும் போது நாங்கள் கடந்த மூன்று மாதமாக அங்கு வேலை செய்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதில் ராஜு என்ற நபரின் தாய் இறந்ததற்கு கூட வெறும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து மணியார்டரில் அனுப்ப சொல்லிவிட்டனர்.
மேலும் தற்போது நாங்கள் வீட்டிற்கு சென்று வருகிறோம் மூன்று மாத கால சம்பளம் கொடுங்கள் என கேட்டபோது சம்பளம் கொடுக்காமல் மிரட்டியதாக கூலித் தொழிலாளிகள் குற்றம் சாட்டினர். மேலும் பணம் கொடுக்க முடியாது இங்கிருந்து யாரும் போகக்கூடாது என கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம் இப்போது எங்களின் ஊர்களுக்கு செல்ல பணம் இல்லை.ஆகையால் எங்களது சம்பளத்தை வாங்கிக் கொடுங்கள் என மாவட்ட ஆட்சியரிடத்தில் முறையிட்டனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu