/* */

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதி பலி

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ரயில் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதி  பலி
X

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ரயில் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ,புட்லூரை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக, புட்லூர் பகுதியில் குழந்தைகளோடு வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் பணிசெய்து வருகிறார். பணி முடித்து விட்டு நேற்றிரவு அவரது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள புட்லூர் ரயில்வே தண்டவாளத்தை அவர் கடக்க முயற்சித்த போது, அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் விரைந்து வந்தது. இதனை கண்டு தண்டவாளத்தை கடந்த திவ்யா அங்கு வந்த புறநகர் விரைவு ரயிலை கவனிக்காமல் சென்றுள்ளார்.

விரைவுரயில் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் பாதி உடல் சம்பவ இடத்திலும் மீதி உடல் அரை கிலோ மீட்டர் தூரம் தூக்கி வீசிஎறியப்பட்டது. இந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

சம்பவ பகுதியில் அருகே ரயில்வே மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், பாலப்பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே உயிரழப்புகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 5 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க