சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகள் சீர்படுத்தப்படுமா? அரசுக்கு மக்கள் கோரிக்கை
சேதமடைந்துள்ள கிருஷ்ணா கால்வாய்.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை போக்க 1983ஆம் ஆண்டு தமிழக அரசும் ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12.டிஎம்சி தண்ணீரைஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டிஎம்சி தண்ணீர், மீதமுள்ள 4.டி எம் சி தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் வரை திறந்து விடப்படும்.
இத்தண்ணீர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சோமசிலா அருகே கண்டலேரு அணையிலிருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வரை 177 கிலோமீட்டர் கால்வாய் வெட்டப்பட்டு அதன் மூலம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயிண்ட் என்ற இடத்திற்கு தண்ணீரை தமிழக எல்லைக்குள் வரும்.
இதனைத்தொடர்ந்து சுமார் 25.கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும். இங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது சோழவரம் ஏரி, புழல் ஏரி, தேர்வாய் கண்ணன் கோட்டை ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் சேமித்து வைத்து சுத்தகரிப்பு செய்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் ஜீரோ பாயிண்ட் என்ற தமிழக எல்லைப் பகுதியில் இருந்து பூண்டி ஏரி வரை உள்ள 27.கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் பல இடங்களில் கால்வாயின் இருபுறமும் கரைகளில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் பூச்சுகள் சரிந்து சேதம் அடைந்துள்ளன.
இதனால் பூண்டி ஏரிக்கு செல்லும் தண்ணீரானது பூமியால் உறிஞ்சப்பட்டு வீணாகிறது. இதனை சீரமைக்க தமிழக அரசு ரூபாய் 24.கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கர்நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்தவாக்கம் பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பணியானது முழுமை அடையாமல் கால்வாய் இருப்பரங்களில் கரைகள் மிக பலவீனமாக காணப்படுகிறது. பல பகுதிகளில் பணிகள் செய்யப்பட்ட இடங்களின் அருகாமலே கரைகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் தெரிவிக்கையில், கால்வாயை சீரமைக்க அரசு ஒதுக்கும் நிதியை முறையாக பயன்படுத்தாமல் எங்கு சேதம் உள்ளதோ அந்த இடத்தில் மட்டும் பணிகளை செய்து மீதமுள்ள இடங்களில் பணிகளை செய்யவில்லை என்றும், சேதமடைந்த இப்பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் பொது மக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu