4 வயது மகளுடன் மனைவி மாயம்- கணவன் புகார்

4 வயது மகளுடன் மனைவி மாயம்- கணவன் புகார்
X

திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் 4 வயது மகளுடன் மனைவி மாயமானதாக கணவன் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (30) இவரது மனைவி ஜெயலட்சுமி (25). இவர்களது மகள் சுபிக்ஷா (4). சரவணன் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் கெமிக்கல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி மற்றும் மகள் இருவரும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சரவணன், அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவினர் வீட்டில் தேடி பார்த்துள்ளார். எங்கும் இல்லாததால் சரவணன் மணவாளன் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!