திருவள்ளூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை

திருவள்ளூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக மழை
X

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழை.

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்கள் தமிழ்நாடு புதுவை, காரைக்கால் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை, சீத்தஞ்சேரி, பூண்டி, வெங்கல், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர், வெள்ளவேடு, திருமழிசை, மணவாளநகர்,பேரம்பாக்கம் கடம்பத்தூர், சுற்று வட்டார பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் 2 மணி நேரத்துக்கு மேலாகவே மின்சாரமும் துண்டிக்கப்பட்டது விடாத பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!