அதிமுக 51 வது தொடக்க விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
Welfare Assistant -பெரியபாளையம் அருகே ஆரணியில் நடைபெற்ற அதிமுகவின் 51.ஆவது தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றினார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 51 வது தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி பஜார் பகுதியில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்தார் தலைமை கழக பேச்சாளர் குழந்தைசாமி, பஞ்சாட்சாரம், அமர்நாதன், ஆரணி பேரூர் கழகச் செயலாளர் தயாளன், பானு பிரசாத், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஸ்ரீதர், வெங்கட்ராமன், குண பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் சிறப்பு அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் டி. கே.எம்.சின்னய்யா கலந்து கொண்டு பேசியதாவது கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக ஏழை படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் ஓய்வூதியம், நான்கு வெள்ளாடுகள் கறவை மாடுகள், கிராமம் தோறும் மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் ஜெயலலிதா. அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்து வந்தனர்,
தற்போது இருக்கின்ற திமுக அமைச்சர்கள் தலைவரையே மதிப்பதில்லை. மக்களைப் பற்றி சிந்திக்காமல் இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகியும் தற்போது வரை முழுமையாக ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தப்படவில்லை. வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும், அதிமுக மட்டும் தான் மக்களுக்காக சிந்தித்து செயல்படும் ஒரே கட்சி என்று கூறினார்
பின்னர். பொது மக்களுக்கு சேலை, சலவைப் பெட்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருத்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், நகர செயலாளர் ரவி, பொன்னேரி நகரச் செயலாளர் என். செல்வகுமார், பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத், பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் வெங்கட்ராமன், ஊத்துக்கோட்டை நகரச் செயலாளர் ஷேக்.தாவூத், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி பேரூர் அம்மா பேரவை செயலாளர் கே. என்.சீனிவாசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு வந்திருந்த பொது மக்களுக்கு சேலை மற்றும் ரொக்க பணம் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கன் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் மீது விழுந்து முந்தி அடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu