திருவள்ளூர் அருகே தீபாவளியையொட்டி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் அருகே பாகல்மேடு கிராமத்தில் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகல்மேடு ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,பாகல்மேடு ஊராட்சியில் இயங்கி வரும் ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளையின் சார்பில் 60 விழியாற்றல் குறைந்தோருக்கும்,70 மாணவர்களுக்கும் என மொத்தம் 130 பேருக்கு தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஸ்வீட்,பட்டாசு பாக்ஸ், மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி இன்று காலை பாகல்மேடு காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளையின் நிறுவனர் சமூகசேவகர் த.கண்ணன் தலைமை தாங்கினார்.ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகி திவ்யா முன்னிலை வகித்தார்.
இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக ஞான குருநாதர் தவத்திரு வாதவூரடிகள்,காவேரி மருத்துவமனையின் டாக்டர் வி.பி.நாராயணமூர்த்தி,பாகல்மேடு ஊராட்சிமன்ற தலைவர் தேவகிதங்கபிரகாசம், திருவள்ளூர் ரோட்டரி தீபம் தலைவர் சக்சஸ் கார்த்திகேயன்,தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு 130 பயனாளிகளுக்கு தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழை-எளிய மக்கள் மனம் குளிர சமூக சேவகர் கண்ணன் செய்து வரும் இப்பணியை பாராட்டி பேசினர்.மேலும்,கண்ணன் இவ்வாறான சமூக சேவைக்கு அடுத்த தலைமுறையை தனது மனைவி மற்றும் மகள்களையும் ஈடுபடுத்தி அவர்களும் மன மகிழ்ச்சியுடன் செய்து வரும் இப்பணியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். முன்னதாக அனைவரையும் தேஜஸ்வினி வரவேற்றார். முடிவில்,தேஜஸ்ஸ்ரீ நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu