முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
X

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கியபோது.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பங்கேற்றார்.

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், கலந்துகொண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், அரசுப்பள்ளியில் தமிழ்வழியில், பயின்று மருத்துவ துறைக்கு நுழைந்துள்ள மாணவர்களை மதிக்க வேண்டும். குறைவான மதிப்பெண்கள் எடுத்து கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்று அவர்களை ஏற்றத்தாழ்வுடன் பார்க்கக் கூடாது. அதுபோன்று எண்ணங்கள் உங்கள் உள்ளத்தில் இருந்தால் அதை எடுத்து குப்பையில் போட வேண்டும். உங்களை அணுகும் நோயாளிகளை அன்புடன் பணிவுடன் மதித்து உங்கள் சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளை அங்கியை உடுத்துவதனால் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்த வெள்ளை அங்கி உடை உங்களுக்கு பெருமை அளிக்க வேண்டும். வெள்ளை அங்கி அணிவதன் மூலம் நிங்கள் கர்வம் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் மருத்துவமனை இருப்பதால் உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக நாங்கள் பார்த்துக் கொள்வதாக மாணவர்களின் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் நம்பிக்கையை தெரிவித்தார்.

இவ்விழாவில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்களும், மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil