கிருஷ்ணா கால்வாய் சேதங்களை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் ஆய்வு

புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணா நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் ஆய்வு செய்தார்.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை பூர்த்தி செய்யும் கிருஷ்ணா கால்வாய் பகுதியில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பாதிப்படைந்த பகுதியை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணா நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா கால்வாய் பகுதியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதால் அவைகளை புனரமைப்பு செய்வதற்காக அரசு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதால் கிருஷ்ணா வழித்தடம் தொடங்கும் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் முதல் 25 கிலோ மீட்டர் வழித்தடம் வரையில் உள்ள மதுகுகள், கால்வாய் பகுதிகள் சேதமடைந்த பகுதியை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சிறுகடல் பகுதியில் உள்ள மதுகுகள் பகுதியில் சரியாக பராமரிப்பு செய்யாமல் இருந்ததைக் கண்ட அவர் அதிகாரிகளை கண்டித்தார்.
மேலும் கிருஷ்ணா கால்வாய் சேதங்களை புனரமைப்பு செய்ய 12 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதால் அத்தகைய நிதி ஆறு மாதங்களை கால்வாயில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மதகு பகுதிகள் சரி செய்து முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் கிருஷ்ணா நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு ஆந்திரா அரசு ஆண்டுதோறும் வழங்கும் குடிநீரானது இந்த கிருஷ்ணா கால்வாய் வழியாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து இங்கிருந்து கால்வாய் வழியாக சோழவரம்,புழல் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து வைத்து தண்ணீரை சுத்தகரித்து சென்னை மக்களின் குடிநீர் காக திறந்து விடப்படுகிறது.
ஆனால் பலமுறை கிருஷ்ணா கால்வாயில் பராமரிப்பு என்ற பெயரில் அரசு வழங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை இதற்காக செலவழிக்கப்படுகிறது. செய்யும் பணிகளை தரமான முறையில் செய்யப்படுவதில்லை என்றும், முறையாக இந்த பணிகளை செய்தால் கால்வாயில் பல்வேறு பகுதிகளில் இது போன்று சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், செய்திருக்கின்ற பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு சிறு சேதங்களை சரி செய்யலாம் என்றும், அதிகாரிகள் மெத்தனப் போக்கு இதற்கெல்லாம் காரணம் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu