திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாடி பாலாஜி பங்கேற்பு.
பிரபல திரைப்பட நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உணவு வழங்கி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் இளைஞர் அணி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை குளிர்விக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியும், தர்பூசணி, இளநீர், மோர் வெள்ளரிக்காய் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.
மேலும் தமிழக வெற்றிக்கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் தாடி பாலாஜியை அங்கிருந்த வெற்றிக் கழக தொண்டர்கள் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வரவேற்று தாடி பாலாஜியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அப்போது திரைப்பட நடிகர் தாடி பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது, கடுமையான வெயிலால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த பக்கம் திரும்பினாலும் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் எங்கு பார்த்தாலும் பொது மக்களுக்கு சிறப்பாக உதவிகளை செய்து வருகிறார்கள்.
தற்போது திருவள்ளூரில் தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு சிறப்பாக பணி செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் நான் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நான் இங்கு நட்பு ரீதியாக வந்திருக்கிறேன். தளபதி விஜய் நல்ல விஷயம் எது செய்தாலும் அங்கு தாடி பாலாஜி கண்டிப்பாக வந்து நிற்பேன்.இவர்கள் பொதுமக்களுக்கு நிறைய செய்து கொண்டு வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் அனைவரும் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
தளபதியின் அப்பா மற்றும் தளபதி ஆகியோர் எனக்கு நிறைய உதவிகள் செய்து உள்ளனர்.இதன் மூலம் எனது நன்றி கடனை கண்டிப்பாக செய்வேன். தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வேன். தமிழக வெற்றி கழகத்தில் சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார். மேலும் தற்போது திமுக ஆட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது. சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள் என்று கூறினார்.
மேலும் இந்த ஆட்சி குறித்து மார்க் போட கேட்டபோது மார்க்கு போல நான் என்ன வாத்தியாரா என்று கூறினார்.
மேலும் மக்களுக்கு எந்த கட்சி நல்லது செய்கிறதோ அந்த கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் நடிகர் தாடி பாலாஜிக்கு சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu