திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 15 உள்ளாட்சி அமைப்புகளில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 825 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால். இவற்றில் 282 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு முன்பு 220 வாக்குச்சாவடிகளாக இருந்தது.
தற்போது வேட்புமனு தாக்கலுக்கு பின்பு வேட்பாளர்கள் விவரம் வந்தவுடன் பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு பதட்டமானவை 282 வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 825 வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 282 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர் பான புகார்களை தெரிவிக்க வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 7626 மற்றும் தொலைபேசி எண்கள். 044-27661950 மற்றும் 044-27661951 -ல் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆல்பி ஜான் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu