அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து தர கோரிக்கை.
மாளந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அடுத்த மாளந்தூர் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி ஆனது கடந்த2014-15 நிதி ஆண்டில் ரூ. 1 கோடி60 லட்சத்து81 ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மாணவர்களின் படிப்பதற்கு திறக்கப்பட்டது.
இந்த பள்ளியில் மாளந்தூர் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள கல்பட்டு, ஆவாஜி பேட்டை, மெய்யூர், நாயுடு குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மாணவி மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 5 ஏக்கர் பரப்பளவில் நடுவில் கட்டப்பட்ட பள்ளிக்கு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்காததால், பள்ளிக்கு அருகாமலே உள்ள சமூக காடுகளில் இருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பூச்சிகள் அடிக்கடி உள்ளே வருகின்றன.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தெரிவிக்கையில், இப்பள்ளி கிராமத்தில் அமைவதற்கு முன்பு மாளந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஊத்துக்கோட்டை, வெங்கல், பெரியபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் பேருந்துகள் மூலம் சென்று படித்து வருவார்கள். சில நேரங்களில் பேருந்துகள் வரவில்லை என்றாலும் நீண்ட தூரம் நடந்து சென்று படித்து வந்தனர். இந்த தூரத்தை கடக்க முடியாத நிலையில், நன்றாக படிக்கும் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டு அவர்கள் படிப்பு பாதிலேயே நின்று போனதாகவும். கூறினார்
இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை கிராம மக்கள் பங்களிப்புடன் எடுத்துக் கூறி மனு அளித்தும், உயர்நிலைப்பள்ளியை மாளந்தூர் கிராமத்தில் அமைத்து தந்தால் மாணவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து அரசு உயர்நிலை பள்ளி கட்டி தந்தது. தற்போது இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்
எனவே தற்போதாவது மாவட்ட நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் மற்றும் கிராம பொதுமக்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu