அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை
X

மாளந்தூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி.

மாளந்தூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தர கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஏலாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கிராமத்தைச் சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் ஒட்டி சமூக காடு ஒன்று உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் பள்ளிக்குள் நுழைவாயாகவும், இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். இதனால் மாணவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயின் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தாங்கள் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி இல்லை. இந்த கிராம மாணவர்கள் மட்டுமல்லாமல் சுற்று வட்ட கிராம மாணவர்களும் மேல்படிப்பு தொடர பெரியபாளையம், அல்லது ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பல கிலோமீட்டர் கடந்து சென்று படித்து வந்தனர்.

இதனால் நன்றாக படிக்கின்ற பெண் குழந்தைகளை நீண்ட தூரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் விரும்பாத காரணத்தினால் அவர்கள் படிப்பு பாதியில் நின்று போனது. தாங்கள் பகுதிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி கட்டி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.1கோடி 60 லட்சத்து.81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நடப்பட்டு பணிகள் துரிதப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டு.3.09.2017 மாணவர்களில் பயன்பாட்டிற்காக அன்று திறக்கப்பட்டது.

இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித பயனில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தெரிவித்தார்.

எனவே மாணவர்களின் நலனை கருதி இப்பள்ளிக்கு விரைவாக சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்களும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!