திருவள்ளூர் அருகே தரமற்ற சாலை அமைப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்

X
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் கட்சியினர்.
By - Saikiran, Reporter |16 Feb 2024 11:00 AM IST
திருவள்ளூர் அருகே தரமற்ற சாலை அமைப்பதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமத்தில் தரமற்ற சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், போலிவாக்கம் சத்திரம் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் பாரத பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. இ்நிலையில் கிராமத்தில் பிரதம மந்திரி சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் இதனை உடனடியாக அரசு அதிகாரிகள் தலையிட்டு தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலை பணிகளை நிறுத்தி தரமான சாலை அமைத்து தர மாணவர்கள், கிராமத்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்று கூடி திடீரென திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கூறும் போது பிரதம மந்திரியின் சாலை அமைக்கும் திட்டத்தில் அமைக்கப்படும் சாலையை போலிவாக்கம் சத்திரம், போளிவாக்கம் புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, குன்னத்தூர், மேட்டுகாலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம் மேட்டுகாலனி,பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வாய் உள்ளிட்ட பத்துக்கும் கிராமத்து மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வரும் நிலையில் சாலையை தரமுள்ளதாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu