செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
X
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அரும்பாக்கம் கிராமத்தில் முகேஷ் அம்பானி ஜியோ செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

அரும்பாக்கம் கிராமத்தில் அம்பானியின் தொலை தொடர்பு நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த சுமார் 3500.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த குடியிருப்பு சூழ்ந்த பகுதியில் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் மேற்கொண்டனர்.

அப்பகுதியில் தனி நபர் இடத்தில் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ செல்போன் டவர் ஏற்கனவே ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் அப்பகுதியில் புதியதாக இரண்டாவதாக ஜியோ செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு கதிர்வீச்சு, புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய், கண் பார்வை குறைபாடு ஏற்பட கூட அபாயம் உள்ளதாக கூறி கிராம மக்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டவரை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture