கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்
X

திருவள்ளூர் பஜாரில் உள்ள பழங்கள், காய்கறி விற்பனை கடைகளில்  மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதையடுத்து திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 50% பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முறையாக முக கவசம் அணிந்து சமூக பாதுகாப்பை கடைபிடித்து பயணம் செய்கிறார்களா என்பதை பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

கடையில் இருப்பவர்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா என்றும் பொருட்களை வாங்க வரும் போது பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் சனிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும்

காய்கறி கடையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும், அதை உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!