திருவள்ளூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒருங்கிணைந்த ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தண்டலம் பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி எல்லாபுரம் ஒருங்கிணைந்த ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை நகரத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கயடை அறிவுச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
எல்லாபுரம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் காக்கை முருகேஷ் அனைவரையும் வரவேற்றார். எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னிகை சந்தோஷ், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் விஷ்ணுதரன் மற்றும் பொருளாளர் ஜெபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பார்களாக ஆந்திர மாநில செயலாளர் சத்தியவேடு சாம்சன், அச்சு ஊடக மையத்தின் மாநில துணை செயலாளர் வெங்கல் பாக்சர் மணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் தண்டலம் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் வெற்றிச்செல்வன், சக்கரவர்த்தி, வெங்கல் பெரியவர் தாந்தோனி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பா.நேசகுமார், கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மாநெல்லூர் 108 சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுதாராணி, அரிவளவன், சரவணன், அகன்ராஜ், சீனிவாசன், பாண்டி, ராமமூர்த்தி, தீனதயாளன், செல்வம், தினேஷ், செல்வம், தமிழரசன், ஏழுமலை, சந்தோஷ், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் அறிவித்திருக்கின்ற டிசம்பர் 23-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு ஒரு ஒன்றியத்திற்கு சுமார் 500 நபர்களை அழைத்து செல்லவேண்டும் என்றும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரை வெற்றியடைய உழைத்து அந்த வெற்றியை தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு காணிக்கை ஆக்குவோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மறைந்த முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் அவர்களுக்கு வீரவணக்க மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எல்லாபுரம் சுற்று வட்டார பகுதிகளான சிற்றம்பாக்கம், லட்சிவாக்கம், சூளைமேனி, செங்கரை, கீழ்க்கணர் கண்டிகை, கண்டிகை, கயடை, சிறுனை, மற்றும் ஊத்துக்கோட்டை நகரத்தை சேர்ந்த இளைஞர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பட்டதாரிகள் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த நீலகண்டன், இஸ்லாமிய பெண் ஜாஸ்மீன் ஆகிய 50க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இனைத்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும் தண்டலம் பிரசாந்த் என்கின்ற பேரறிவாளன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu