மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. நிர்வாகி கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. நிர்வாகி கைது
X

தமிழ்ச்செல்வன்.

திருவள்ளூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 3மாதமாக தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, தண்டலம் பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வரும் தமிழ்ச்செல்வன்(48). மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதால் சரித்திட பதிவேடு குற்றவாளியாகவும் கருதப்பட்டார்.

இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாளுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மாரியம்மாளுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை தமிழ்ச்செல்வன் திருமணம் செய்துள்ளது. மாரியம்மாளுக்கு தெரியவந்தது தகவலறிந்த மாரியம்மாள் தமிழ்செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாரியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாரியம்மாள் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வி.சி.க. நிர்வாகி மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் தமிழ்ச்செல்வன் தலைமறைவானார், அவரை பல இடங்களிலும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் போலீசாரின் வலையில் சிக்காமல் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். சுமார் 3மாத காலமாக தமிழ்ச்செல்வன் போலீசாரின் பிடியில் சிக்கவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் தமிழ் செல்வனை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business