மத்திய இணை அமைச்சர் எல் முருகன், சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறுவாபுரி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.அப்போது செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், கோயில் முன்பு வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பக்தர்களும், பொது மக்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு சிறுவாபுரியில் உள்ளது பிரசித்திபெற்ற முருகன் கோயில். இங்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக விநாயகர் சந்நிதியில் சாமி தரிசனம் செய்த அவர், ஆதிமூலவர், பைரவர் சந்நிதிகளில் தரிசனம் செய்த பின், மூலவரை தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த மத்திய அமைச்சரிடம் கோயிலின் வெளியில் காய்கறி, பூ வியாபாரிகள் செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், கோயில் முன்பு வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பக்தர்களும், பொது மக்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் இது குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu