பெரியபாளையம் அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.
பெரியபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருச்சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருச்சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6கிலோ கஞ்சாவையும், இருசக்கர வாகனம், 2செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இருச்சக்கர வாகனத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஊத்துக்கோட்டை அடுத்த வேளகாபுரத்தை சேர்ந்த விக்கி ( வயது 30), செல்வராஜ் ( வயது 26) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவை ஒட்டி உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மாநகரம் உள்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. எனவே இது குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கையில் இதுபோன்று கஞ்சா கடத்தி நாளை எதிர்காலத்தை சீரழிக்கும் இது போன்ற சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது தண்டனைகளை கடுமைப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்று கஞ்சா போதைப் பொருட்கள் கடத்தல் தடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu