லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு

லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு
X

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இறந்த இருவர்.

திருவள்ளூர் அருகே லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வத்தின் மகன் சின்னராசு(30). இவருக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகும் நிலையில் மனைவி ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளார். காக்களூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரிகரன்(19). இவர்கள் இருவரும் பூந்தமல்லி அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சாலையில் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தனர். இதனையடுத்து ஸ்ரீ பெரும்புதூர் சாலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்று வேலை முடித்துவிட்டு மாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அருகே வந்த போது இருசக்கர வாகனம் சறுக்கி ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கனரக லாரியின், பின்புறம் மோதி டயரில் சிக்கியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த மணவாளநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து. இதுகுறித்து வழக்குப் பதிந்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்