விஜயநகர பேரரசு காலத்து இரு செப்பேடுகள் கண்டெடுப்பு

விஜயநகர பேரரசு காலத்து இரு செப்பேடுகள் கண்டெடுப்பு
X

செப்பேடுகள் படம்.

திருவள்ளூர் அருகே விஜயநகர பேரரசு காலத்திலான பயன்படுத்தப்பட்ட ஸ்ரீசிங்கீஸ்வரர் கோவிலில் இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் உள்ள 1057 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசிங்கீஸ்வரர் கோவிலில் விஜயநகர பேரரசு காலத்திலான பயன்படுத்தப்பட்ட இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு கிராம பகுதியில் சுமார் 1057 ஆண்டுகள் பழமையான ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்து இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீசிங்கீஸ் வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனை செய்துள்ளார்.

அப்பொழுது விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட இரு செப்பேடுகள் கண் டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த செப்பெடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந்ததால், அதன் புகைப்படங்களை கர்நாடகா மாநிலம்- மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

செப்பேடுகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம் அத்தகைய செப்பேடுகளை ஆய்வு செய்ததில்

ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513-ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு மன்னன் காலத்தைச் சேர்ந்தது என்றும்,

பல பிராமணர்களுக்கு அரசரால் நிலங்கள் தானமாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஆப்பிள் iOS 18.1 நினச்சுகூட பாக்கமுடியாத அம்சங்களுடன்...!