திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
X
கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையைக் கரைக்க சென்ற போது, நீரில் மூழ்கி 2சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுகடல் ஆர்.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மூர்த்தியின் மகன் சாமு விக்னேஷ் (13); கொட்டும்பேடு பி.கே. நகர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமனின் மகன் மோனிஷ் (11). இருவரும் இணைந்து தங்கள் வீட்டு அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில், விநாயகர் சிலையை கரைக்க சென்றனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் தவறி நீரில் விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டும் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், தீயணைப்பு துறை விரைந்து வந்து தேடுதல் பணியில் இறங்கினார்கள்.

கிருஷ்ணா கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், இருவருடைய உடலும் சுமார் 11மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சடலத்தை மீட்டு திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் 2பேர் இறந்ததால் அவ்வூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்