சென்னை புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற இருவர் கைது

சென்னை புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற இருவர் கைது
X
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வ்வபோது சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை காவலர்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமச்சந்திரன் என்ற கைதியை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் விஜயராகவன், சந்தோஷ் ஆகிய இருவர் வந்துள்ளனர். பார்வையாளர் அறை வழியே வந்த இருவரும் உணவு பொருட்களுடன் ஜீன்ஸ் பேண்ட்டிற்குள் மறைத்து கொடுக்க முயன்ற கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சிறைக்குள் கஞ்சாவை சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india