புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் .

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன் .
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன் 

சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறலாம் மேல்முறையீட்டுக்கும் செல்லலாம் என்பதால் மீண்டும் கட்டாயம் பைக் ஓட்டுவேன் என டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார்

சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனம் ஓட்டி டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் டி.டி.எப்.வாசன் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடுலாம் என கருந்து தெரிவித்து இருந்தார்.

இதனிடையே டிடிஎப் வாசனுக்கு நவம்பர் 9ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது எனவும், மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து டிடிஎப்.வாசன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டிடிஎஃப் வாசனை அழைத்து சென்றனர்.

சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன், மிகப்பெரிய விபத்தில் சிக்கிய தனது முதுகில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், 10 ஆண்டுகள் எப்படி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம் எனவும், 6 மாதங்கள், 1 ஆண்டு மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகவும், நானாக எனது கையை உடைத்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார்.

சிறையில் அதிகாரிகள் பண்பாக நடந்து கொண்டனர். 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் செய்யப்பட்டுள்ளது என்பது திருத்துவதாக இல்லை எனவும், வாழ்க்கையை அழிப்பதாக உள்ளதாக தெரிவித்தார். வாகனத்தை ஓட்டுவது தான் தன்னுடைய விருப்பம் எனவும் தன்னுடைய விருப்பத்தையே தொழிலாக மாற்றி உள்ளதாகவும் வாசன் தெரிவித்தார்.

உங்களை பார்த்து சிறுவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது குறித்த கேள்விக்கு நீங்கள் ஏன் சிறுவர்களுக்கு பைக் கொடுக்குறீர்கள் என டிடிஎஃப் வாசன் பெற்றோர்களுக்கு வினா எழுப்பினார். என்னை பார்த்து சிறுவர்கள் ஈர்க்கப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாக கூறும் நிலையில் எதை பார்த்து தான் அனைவரும் ஈர்க்கவில்லை எனவும் தான் கூட சிறுவனாக இருந்தபோது எல்லா ரிப்போர்ட் என்னுடைய பெற்றோரிடம் ஹெலிகாப்டர் கேட்டேன் என வாசன் தெரிவித்தார்.

குழந்தைகள் கேட்டவுடன் வாகனம் வாங்கி தருவது எந்த வகையில் நியாயம் எனவும் வாசன் எதிர் கேள்வி எழுப்பினார். தன்னுடைய கை எலும்பில் நிச்சயமாக முறிவு ஏற்பட்டது என்றும் டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்தில் நடிப்பீர்களா என கேள்விக்கு திரைப்படத்திலும் நடிப்பேன் கட்டாயம் பைக்கும் ஓட்டுவேன் என வாசன் உறுதிப்பட தெரிவித்தார் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறலாம் தற்போதைய ஓட்டுனர் உரிமம் ரத்த தொடர்பாக மேல்முறையீடும் செய்யலாம் எனவும் தெரிவித்தார். தன்னுடைய கை எலும்பு முறிந்த போது கூட கவலைப்படவில்லை எனவும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது தெரிந்த போது கண் கலங்கியதாக தெரிவித்தார்.

டிடிஎஃப் வாசன் உடல்நலம் தேடி வந்ததற்கு பிறகு மஞ்சள் வீரன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என திரைப்படத்தின் இயக்குனர் தெரிவித்தார். பெரியார் பிறந்த தினத்தில், அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் விழுந்த ஒருவன், இந்த தமிழ் மண்ணில் மாபெரும் தலைவனாக வருவான், வெல்வான், என்றும் இயக்குனர் தெரிவித்தார்.

இந்நிலயில், இந்தியாவில் அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத போது சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை மட்டும் வைத்து வாகனத்தை இயக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்