பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க திணறிய போக்குவரத்து போலீஸார்

பெரியபாளையத்தில்  போக்குவரத்து நெரிசலை சமாளிக்க  திணறிய போக்குவரத்து போலீஸார்
X

 பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பழைய இடத்து பக்தர்கள் கூட்டம் பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் சுயம்புவாக எழுந்தருளிய பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது

பெரியபாளையம் 8.வது வார ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பழைய இடத்து பக்தர்கள் கூட்டம் பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் சுயம்பு எழுந்தருளி புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இப்போது ஆடி திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று 8.-ஆவது வார ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை அடுத்து பக்தர்கள் வந்த கார், ஜீப், வேன், பஸ் என பல்வேறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் சாலை ஓரங்களில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இது மட்டுமல்லாமல் போக்குவரத்து சரி செய்ய போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியது .

இது குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகையில் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் திருவிழா காலங்களில் ஆண்டு காலம் பல லட்சக்கணக்க பக்தர்கள் வந்து செல்வதால் வாகன நிற்பாட்டுவதற்கு போதிய இடம் வசதி பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை இருபுறம் ஆக்கிரமித்து கடைகள் உள்ளிட்டவை கட்டியதால் குறுகிய சாலையால் வாகனங்கள் வந்து செல்ல மிகவும் கடினமாக மாறியதாகவும் இதனால் பெரியபாளையத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்தால் ஒரு நாள் ஆகிவிடுகிறது. எனவே அரசு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்