கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு
கன்னிகைப்பேர் அருகே உள்ள திருப்பதி செல்லும் சாலை தான் இது. ஏரி அல்ல.
கன்னிகைப்பேர் ஏரியிலிருந்து வெளியேறும் கலிங்கல் நீரால் ஜனப்பச்சத்திரம்- பெரியபாளையம் வழியாக திருப்பதி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மிக்ஜாம் புயலாக மாறியதால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ௩ மற்றும் ௪ம் தேதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இறுதியாக அந்த புயல் ஆந்திர மாநிலத்தில் கரை கடந்தது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையினால் ஏரி, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. சமீபத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புழல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும், அருகிலுள்ள ஆந்திர மாநிலத்திலும் ஆறு, ஏரிகள் குளங்கள் என தண்ணீர் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி கலிங்கள் வழியாக தண்ணீரானது வெளியேறி வருகிறது. இந்த தண்ணீரானது ஜனபசத்திரம் பகுதியில் இருந்து பெரியபாளையம் வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து இடுப்பளவு செல்வதால் அவ்வழியாக வாகன போக்குவரத்து மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில கனரக வாகனங்கள் ஆபத்தான நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீர் நிலைகளை தாண்டி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலையில் தண்ணீரானது இடுப்பளவு தேங்கி பாய்ந்து வருவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் ஆரணி புதுவாயில் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னிகைப் பேர், தானாகுளம், மஞ்சங்கரணை, வண்டி காவனூர், கோட்டை குப்பம், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாமல் சுமார் 10 கிலோமீட்டர் மேல் அளவிற்கு நடந்து சென்று ஜனபச்சத்திரம் என்ற பகுதிக்கு சென்று பயணம் செய்து வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றி சாலையை சீர்படுத்தி போக்குவரத்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரியபாளையம் அடுத்நிலை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu