திருத்தணி முருகன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

திருத்தணி முருகன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மொட்டை அடித்து காவடி எடுத்து நேத்தி கடன் செலுத்துவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வருவாய்த்துறையினர் மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால் தாசில்தார், கோவில் ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் தங்குவதற்கும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டது. மேலும் கோவில் மேலே இருக்கும் பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு துணை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படும் என கோவில் அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!