அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக புகார்

அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக புகார்
X

திருவள்ளூர், புல்லரம்பாக்கத்தில் அதிக அளவில் எடுக்கப்படும் சவுடு மண்.

புல்லரம்பாக்கம் பகுதியில் அரசு நிர்ணயித்த அளவைவிட சவுடு மண் அதிக அளவில் எடுப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருவள்ளூர் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து சவுடு மண் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சவுடு மண் எடுப்பது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!