கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி கே.வாசன் பங்கேற்பு

தமாகா மாநிலத் தலைவர் ஜி. கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
TMC President Interview
தேர்தல் அறிவிப்பிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வது சில எதிர்க்கட்சிகளுடைய உள்நோக்கமாக இருக்கும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பட்ஜெட்டில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியில் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், புழலில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் வெற்றி யூகங்கள் குறித்தும், உட்கட்சி ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், வருகின்ற நாட்களிலே கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்றார்.
TMC President Interview
சைக்கிள் சின்னம் பெற வேண்டும் என்ற எங்களுடைய கட்சியினுடைய உரிமையை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளதாகவும் நல்லது நடக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். தமிழகத்தின் பொது பட்ஜெட், விவசாய பட்ஜெட் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்றார்.
மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய பட்ஜெட் எனவும், விவசாயி சேற்றிலே கால் வைத்தால் தான் நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்று இந்த அரசு விவசாய பட்ஜெட்டை உணர்ந்து செயல்படுத்தவில்லை என்று சாடினார். மேகதாது அணையிலே காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அணை கட்டக்கூடிய பணிகளை மேற்கொள்ளக்கூடிய நிலைகளை அவர்களது பட்ஜெட்டிலே அறிவிக்கும் போது, தமிழக அரசு அதனை எதிர்க்க தவறியது கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் மறந்து விவசாயிகளை நினைவு கூர்ந்து விவசாயம் சார்ந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலே ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
டெல்டா பகுதி விவசாயிகளுடைய ஒருமித்த கருத்தாக இருக்கிறது என தெரிவித்தார். விவசாயிகளுடைய எண்ணங்களை அகில இந்திய அளவிலே பிரதிபலிக்க கூடிய வகையில் பல விதமான ஆலோசனைகளை விவசாய சங்கங்களிடம் பேசி பயன் தரும் பல அறிவிப்புகளை விவசாயிகளுடைய நலன் கருதி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இருப்பினும் தேர்தல் அறிவிக்கக்கூடிய இரண்டு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வது சில எதிர்க்கட்சிகளுடைய உள்நோக்கமாக இருக்கும் என்ற கருத்து நிலவுவதாக சாடினார். எனினும் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்து அதை கனிவோடு நிச்சயமாக அவர்களை கோரிக்கையை நிறைவேற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்க்கட்சிகளுடைய சூழ்ச்சியிலே அகப்படக் கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் எனவும் ஜி.கே.வாசன் கேட்டு கொண்டார். தலைநகரில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு ஜி.கே.வாசன் பதிலளிக்க மறுத்து விட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu