திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில் பாயும் கழிவுநீர்! நோய் அச்சம்!!

நீர் சுத்திகரிப்பு ஆலை கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளில் ஆறுபோல் ஓடுவதை காணலாம்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளுவர் சிவன் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தேவி மீனாட்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் வற்றாத ஜீவநதிபோல் பாய்ந்தோடுகிறது. சில இடங்களில் அப்படியே குளம்போல் தேங்கிகிடக்கிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொடிய நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மக்ககை பாடாய் படுத்தி வருகிறது.
இந்தநிலையில் இந்த கழிவுநீரால் புதுவித நோயை பரவுமோ என்கிற அச்சமும் பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu