திருவள்ளூர் வீரராகவ சாமி கோவில் குளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி

திருவள்ளூர் வீரராகவ சாமி கோவில் குளத்தில்  தவறி விழுந்து இளைஞர் பலி
X

கோவில் குளத்தில் மூழ்கி இறந்த வாலிபர்.

திருவள்ளூர் வீரராகவ சாமி கோவில் குளத்தில் விழுந்து, கேஸ் குடோன் ஊழியர் பலியானார்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி திருக்கோயில் குளத்தில் தனியார் சமையல் எரிவாயு நிறுவன குடோனில் பணியாற்றும் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் இறந்து அழுகிய நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கேஸ் குடோன் ஊழியர் வீரராகவர் கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்று தவறி விழுந்தாரா? அல்லது குடிபோதையில் ஏதேனும் தவறி விழுந்தாரா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!