திருவள்ளூரில் தடுப்பூசி முகாம்: ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

திருவள்ளூரில் தடுப்பூசி முகாம்:  ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
X

திருவள்ளூர் ஸ் கொரோனா தடுப்பூசி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கொரோனா தடுப்பூசி முகாமினை திருவள்ளூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.

திருவள்ளூர் நகர ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமினை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர், நகர காவல் ஆய்வாளர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!