திருவள்ளூரில் ஒரே நாளில் 436 பேருக்கு கொரோனா: 15 பேர் பலி!

திருவள்ளூரில் ஒரே நாளில் 436 பேருக்கு கொரோனா: 15 பேர் பலி!
X
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 436 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 867 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 15 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4205 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,342 ஆகவும், இதில் 99,619 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1518 என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!