/* */

திருவள்ளூரில் ஒரே நாளில் 735 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஒரே நாளில் 735 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் தொற்று பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 735 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1055 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 17 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7254 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,709ஆகவும், இதில் 94,028 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1427 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 2 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க