திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி!

திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி!
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய பரவல் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, 1072 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 99,560 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1969 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 88,716 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவித்த சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 21 நபர்கள் உயிரிழந்திருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1345 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி திருத்தணி உள்ளிட்ட அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் சிறப்பு மையங்களில் 9499 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்