திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்- எம்எல்ஏ சந்திரன்

திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்- எம்எல்ஏ சந்திரன்
X

திருவள்ளூர் எஸ்.வி.ஜி புரத்தில் சந்திரன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்ட காட்சி.

திருவள்ளூர் எஸ்.வி.ஜி. புரத்தில் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரனிடம் கிராம மக்கள், கோரிக்கை வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வி.ஜி புரத்தில் சட்டமன்றஉறுப்பினர் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராம மக்கள் தங்களுக்கென குடிநீர்ப் பிரச்சினை இருப்பதாகவும் மற்றும் நியாயவிலைக் கடைகள் குறித்த பிரச்சினையினை பெண்கள் மற்றும் ஆண்கள் என ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரனிடம் முன் வைத்தனர்.

தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போரின் தண்ணீர் வரவில்லை எனவும் நியாயவிலைக் கடைகள் வெகுதூரத்தில் அமைந்துள்ளதாகவும், தங்களுக்கென தனியாக நியாய விலைக்கடை அமைத்துத் தர வேண்டியும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையாக வைத்தனர்.

இதனை கேட்டறிந்த சந்திரன் எம்எல்ஏ, கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரிடரை கட்டுப்படுத்தும் பொருட்டு செயல்பட்டு வருவதாகவும், மிக விரைவில் தங்களுக்கான குறைகளை சரி செய்து தருவதாகவும் கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!