திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!
X

கொரோனா காலத்தில் உதவுவதாக, தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதியிடம் கடிதம் வழங்கியபோது.

கொரோனா காலங்களில் உதவ தயாராக இருப்பதாக மாத்தூர் கிளை தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிகாரிகளிடம் கடிதம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாத்தூர் கிளை நிர்வாகிகளுடன் கொரோனா வழிகாட்டுதல் குழு குறித்து அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, மணலி காவல் நிலைய ஆய்வாளர் புஜ்ஜி பாபு, சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதி ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஜமாத்தின் பணிகளை விளக்கி கொரோனா பேரிடர் பணிக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் அளித்தனர்.

அவர்களும் தமக்கான முழு ஒத்துழைப்பை தருவதாகவும், தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!