திருவள்ளூர் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 34.54% வாக்குகள் பதிவு
![திருவள்ளூர் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 34.54% வாக்குகள் பதிவு திருவள்ளூர் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 34.54% வாக்குகள் பதிவு](https://www.nativenews.in/h-upload/2022/02/19/1481370-img-20220219-wa0054.webp)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி-1, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருமழிசை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, நாராவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தம் 318 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதை தவிர்த்து மீதமுள்ள 815 வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 1797 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது இதில் மதியம் 1 மணி நிலவரப்படி.34.54% சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu