வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில்

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில்
X

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி சசிகாந்த் செந்தில் 

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு சசிகாந்த் செந்தில் நன்றியை தெரிவித்தார்

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைத்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக படியான 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி,ஆரணி, குமரப்பேட்டை, பெரியபாளையம், தண்டலம், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்.

முன்னதாக ஆரணியில் உள்ள பேரறிஞர் அண்ணா, மகாத்மா காந்தி, பெரியபாளையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர், உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொது மக்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் மாவட்ட மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க நான் கருவியாக இருப்பேன் என்றும், நான் உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன், மக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்படும், இந்த செயலி மூலம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் குறைகளை தெரிவித்து தீர்வை பெறலாம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன், மாவட்ட அவைத் தலைவர் பகலவன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி,ஆரணி நகர செயலர் முத்து, கரிகாலன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சுகுமார், திமுக நிர்வாகிகள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி,வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், குமரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய துணை அமைப்பாளர் ஐ.ராஜா, வடமதுரைை பார்த்திபன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!