திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்கள் சந்திப்பு..!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி எனவும், திருவள்ளூர் மக்களுக்கு நன்றி எனக்கூறியவர், தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருவதாகவும், ரயலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது எனவும், ரயில்வே லோகோ பைலட்கள் சரியாக தூங்கக்கூட முடியவில்லை எனவும்,
ஒவ்வொரு லோகோ பைலட்டும் 4 நாட்கள் தொடர்ந்து பணி வழங்குவதாக புகார் தெரிவிப்பதாகவும், 130 கி.மீ. வேகத்தில் இருந்து ஒரு கி.மீ.குறைத்தாலும் ரயில்வே நிர்வாகம் கேள்வி கேட்கிறார் எனவும் லோகோ பைலட் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2 நாட்கள் இரவு பணி வழங்கினால் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்பது ரயில்வே பணியாளர்களின் நடைமுறை. அவர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கும்போதுதான், ரயிலில் பயணிக்கும் போது பாதுகாப்பாக செல்கிறோம். வந்தே பாரத் ரயிலை தொடங்கும் போது மோடி பல முறை வருகிறார். நேற்று நடந்தது குறித்து அவர் அக்கறை காட்டவில்லை எனவும் தெரிவித்தார். கொரோனாவில் இருந்து மக்கள் மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் சசிகாந்த் செந்தில் கூறினார்.
ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என அவர் விமர்சித்தார். லோகோ பைலட்டுகளை ரயில்வே நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. அவர்களின் தூக்கத்திற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பினார். மோடியின் கேரண்டி என பேசுபவர்கள், இதற்கு கேரண்டி சொல்வாரா? லோகோ பைலட்டுகள் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. அதிவேக ரயிலை விடுவது முக்கியமில்லை, அதற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறிய அவர், 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசப்படும் எனவும் தெரிவித்தார்.
விபத்தில் மரணமடைந்த 10 உயிருக்கும் மோடி தான் எமன் என்பதே தமது பகிங்கர குற்றச்சாட்டு எனவும் தெரிவித்தார்.
திருவள்ளூரில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தேசிய பிரச்சினையாகவே இதனை கருதி இந்தியா முழுவதும் இது ஒலிக்கும். வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மக்களை அடிக்கடி சந்திக்கும் எம்பியாக தான் இருப்பேன் எனவும், முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பேன். திருவள்ளூரில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லோகோ பைலட்டுகள் தூங்குகிறார்களா என சந்தேகம் வந்துள்ளது. மங்கள்யான், சந்திரயான் விடுகிறீர்கள், ரயில்வே லோகோ பைலட்டுகளை தூங்க விடமால் பணி செய்ய சொல்கின்றனர். விதியை மீறி ரெஸ்ட் எடுக்கும் 100-க்கும் மேற்பட்ட லோகோ பைலட்டுகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் லோகோ பைலட் மொபைல் பார்த்திட்டு இருந்தார் என ஒரு அமைச்சர் கூறினார். அது முற்றிலும் தவறு எனவும், ரயில்வே நிர்வாகத்தை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை வரக்கூடிய நிலை வரும்.
ஒவ்வொரு வாக்குகளும் என்மீது வைக்கப்பட்ட பொறுப்பு. இலவசத்தை ஏன் கொடுக்கிறீர்கள் என கேட்ட மோடி, இப்போது நாங்க வைத்த கோரிக்கையை வைத்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
100 நாள் பணி தான் நாடாளுமன்றத்தில் வைக்கும் முதல் வேலை. மக்களோடு நிற்பதே அரசியல் எனவும் கூறிய அவர், தற்போது எதிர்கட்சியாக இருக்கும் நிலையில், இன்னும் 6 அல்லது 7 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரலாம் என தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வு என்பதே சில பயிற்சி நிறுவனம் பயனடைவதற்காகவே எனவும் தெரிவித்த அவர், நீட் தேர்வு ஒரு வித்தியாசமான அரசியல் எனவும் தெரிவித்தார்.
திருவள்ளூரில் இந்தியா கூட்டணி வேலை பார்த்தது. காங்கிரஸ் என்பதே ஒரு கலெக்டிவ். அடிநாதமே அது தான். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதே காங்கிரஸ் தான். ஈவிஎம் என்பதில் முக்கிய பிரச்சினை என்பதே, நான் போட்ட ஓட்டு எங்கே சென்றது என்பதே தெரியாதது தான் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu