திருவள்ளூர் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்

திருவள்ளூர் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்
X

பைல் படம்

திருவள்ளூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான் (28). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் டோல்கேட் வழியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (55) மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் நாகூர் மீரானை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்த நாகூர்மீரான் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்