திருவள்ளூர்: உயரழுத்த மின்கம்பியில் விளம்பர பேனர் விழுந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்: உயரழுத்த மின்கம்பியில் விளம்பர பேனர் விழுந்ததால் பரபரப்பு
X

மின் கம்பியில் சிக்கியுள்ள விளம்பர பேனர்.

திருவள்ளூரில் விளம்பர பேனர் கிழிந்து மின்கம்பியில் விழுந்தது. அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகே அது அகற்றப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் ரோடு பகுதியில் கட்டிடத்தின் மேல்தளத்தின் மீது வைத்திருந்த ராட்சத தனியார் விளம்பர பேனர் இன்று திடீரென கிழிந்து உயரழுத்த மின்கம்பியில் விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக சென்ற வந்த பொதுமக்கள் பதட்டமடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கும் மின்வாரியத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், அரை மணி நேரம் கழித்து வந்த மின்வாரியத் துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த பேனரை மின்கம்பியில் இருந்து மீட்டனர்.

மிகப்பெரிய விளம்பரப் பேனரை நகரில் முக்கிய சாலையில் கட்டிடத்தில் மேல் தளத்தில் வைத்திருந்த நிலையில் சூறைக் காற்று வீசியதால், அந்த பேனர் கிழிந்து மின் கம்பியில் விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!