/* */

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறி 4 பேர் சாவு-டீன் மறுப்பு!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 4 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறி 4 பேர் சாவு-டீன் மறுப்பு!
X

திருவள்ளூர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையில் மூச்சுத்திணறல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகமாக நிலவி வருகின்றது. தமிழக அரசு தற்போது பலகட்ட முயற்சிகளை செய்து ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கை பற்றாக்குறைகளை தீர்த்து வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை உரிய நேரத்தில் மாற்றாததால் இறந்தனர் என உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இது குறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், இரவு 1 மணிக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில் அதிகாலை 3 மணிக்குத்தான் ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றியுள்ளனர். இதனால்தான் இந்த 4 பேரும் இறந்தார்கள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இவர்கள் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை மறுத்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டின் அரசி கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் இறந்த 4 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அவர்கள் 4 பேரும் 70 வயதை கடந்தவர்கள். ஆகவே, மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக டீன் அரசி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jun 2021 7:04 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...