வீட்டுமனை பட்டா வழங்காததால் இளைஞர் மரத்தில் ஏறி தீக்குளிக்க முயற்சி:பரபரப்பு....

மரத்தில் ஏறி தீக்குளிக்க முயன்ற இளைஞரைக் காப்பாற்றும் போலீசார்.
Tiruvallur District Youth Suicide Attempt
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்காததால்.19 வயது இளைஞர் வேப்பமரத்தில் ஏறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tiruvallur District Youth Tried To SuicideTiruvallur District Youth Suicide Attempt
தங்கள் குடும்பத்திற்கு சொந்தான நிலத்தை தூரத்து உறவினர் அபகரிக்க முயற்சி செய்வதால் பட்டா வழங்கக் கோரி முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த போது இதுபோல் நடந்து கொண்டதால் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அரிகிருஷ்ணன் மற்றும் ராகேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆறுமுகத்திற்கு பூரிவாக்கம் கிராமத்தில் 44 சென்ட் நிலம் உள்ளது. ஆனால் பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகத்தின் தூரத்து உறவினரான பாடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி செல்வி என்பவர் பூரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களை கொண்டு வந்து ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தாரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பலமாக தாக்கியுள்ளனர்.
Tiruvallur District Youth Suicide Attempt
இதில் மூத்த மகன் அரிகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இதனையடுத்து நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக் கோரி வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது மனைவி லட்சுமி மகன் ராகேஷ் ஆகிய 3 பேரும் மனு கொடுக்க வந்துள்ளனர்.
Tiruvallur District Youth Suicide Attempt
இதனைத் தொடர்ந்து பரபரப்பாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்த ஆறுமுகம் மகன் ராகேஷ்(19) என்பவர் திடீரென் மண்ணெண்ணெய் பாட்டிலோடு அங்கிருந்த வேப்பமரத்தில் விறுவிறுவென ஏறியுள்ளார். இதனால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மரத்தின் மீது ஏறும் போது கையில் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீப்பெட்டி எடுத்து பற்ற வைக்க முயன்றான்.
Tiruvallur District Youth Suicide Attempt
ஆனால் விறுவிறுவென மரத்தில் ஏறிய போலீசார் அந்த இளைஞரை பத்திரமாக பேசி கீழே அழைத்து வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பல ஆண்டுகளாக பட்டா கேட்டு விண்ணப்பித்தும் வழங்காததால் இது போன்ற நிலை ஏற்பட்டாதகவும், தூரத்து உறவினர்கள் தங்கள் நிலத்தை அபகரிப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாகவும், பட்டா வழங்காத பட்சத்தில் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu