மாநில சிலம்பாட்ட போட்டி: திருவள்ளூர் மாவட்ட வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை..

மாநில சிலம்பாட்ட போட்டி: திருவள்ளூர் மாவட்ட வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை..
X

சாதனைப் படைத்த மாணவ, மாணவிகள்.

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 112 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டில் சமீப காலமாக மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பயிற்சி மையங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பில் கோவையில் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை பிரிவில் தனித்திறமை, ஆயுதம், நேரடி போட்டி என நடைபெற்ற அந்தப் போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டம் 112 தங்கபத்ககம், 90 வெள்ளிப் பதக்கம், 110 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது .

இது மட்டுமல்ல மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் திருவள்ளூர் மாவட்டம் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற திருவள்ளூர் மாவட்ட அணியில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளை தேசிய துணை தலைவர் முருகக்கனி, தேசிய பொதுச் செயலாளர் தியாகு நாகராஜன், இணைச் செயலாளர் ராஜா, தொழில்நுட்ப இயக்குநர் துரை மற்றும் மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் ரஜினி, பொருளாளர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் பாராட்டினர் .

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தேசிய அளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று தேசிய பொதுச் செயலாளர் தியாகு நாகராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!